சாத்துக்குடி எண்ணற்ற மருத்துவ பயன்களை உள்ளடக்கியது. அஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்ற இரைப்பைக் கோளாறுகளை குணப்படுத்த சாத்துக்குடி உதவுகிறது.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பொதுவாக சளி பிடித்திருக்கும் போது எந்த ஜூஸையும் குடிக்கக்கூடாது. ஆனால் சாத்துக்குடி ஜூஸைக் குடிக்கலாம். ஏனென்றால் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.