கெளதம் மேனன் படத்தின் லீட் ரோலில் அனுஷ்கா...

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (15:59 IST)
என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா கெளத்ம் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார். மீண்டும் அவரது இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
 
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அனுஷ்கா பாக்மதி என்ற கதாநாயகியை மையப்படுத்திய கதையில் நடித்து வருகிறார்.
 
இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. பாக்மதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7 அன்று வெளியாகவுள்ளது.
 
பாக்மதி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்து அனுஷ்கா கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படமும் கதாநாயகியை மைபடுத்திய கதை அம்சத்தை கொண்டதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்