அமலா பாலைத் தொடர்ந்து போலி முகவரியில் கார் வாங்கிய பஹத் பாசில்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (15:55 IST)
மலையாள நடிகரான பஹத் பாசிலும் போலி முகவரியில் கார் வாங்கிய சம்பவம் வெளிவந்துள்ளது.


 


தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துவரும் அமலா பால், தான் புதிதாக வாங்கிய காரை பாண்டிச்சேரியில் போலியான அட்ரஸ் கொடுத்து பதிவு செய்துள்ளார். கேரளாவில் பதிவு செய்தால் 20 லட்சம் வரியாகக் கட்ட வேண்டும் என்பதால், இரண்டு லட்ச ரூபாய் மட்டுமே வரியாகச் செலுத்தி பாண்டிச்சேரியில் பதிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் இன்னொருவரின் அட்ரஸை போலியாகக் கொடுத்துள்ளார். இந்த விஷயம் நேற்று வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், மலையாள முன்னணி நடிகரான பஹத் பாசிலும் இதேபோன்ற விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்.பஹத் பாசிலின் காரும், பாண்டிச்சேரி லாஸ்பேட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டு முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமலா பாலைப் போல வேறு பெயரில் பதியாமல், பஹத் பாசில் பெயரிலேயே பதியப்பட்டுள்ளது.

கேரளாவில் பதிவு செய்தால் 14 லட்சம் வரிகட்ட வேண்டும் என்பதால், வெறும் ஒன்றரை லட்சம் செலுத்தி பாண்டிச்சேரியில் பதிவு செய்துள்ளார் பஹத் பாசில். அமலா பால், பஹத் பாசில் இருவரின் கார்களுமே பென்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்