‘தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (19:38 IST)
தளபதி விஜய் நடித்த ’பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனை அடுத்து தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்து நேற்று முதல் மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது 
 
 
நேற்றைய முதல் அறிவிப்பாக இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று இரண்டாவது அறிவிப்பாக இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் என்பவர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அந்தோணி வர்கீஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
மேலும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளிவரும் என்பதும் இந்த அறிவிப்பில் இயக்குநர் கே பாக்யராஜ் மகன் சாந்தனு என்ற இணைய உள்ளார் என்ற அறிவிப்புதான் என்றும் கூறப்படுகிறது 
 
 
அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாம் வாரம் தொடங்கப்பட உள்ளது என்பதும் இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்