அண்ணாத்த தெலுங்கு திரையரங்க உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:22 IST)
அண்ணாத்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதை முன்னிட்டு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.

அதையடுத்து இரண்டு பாடல்கள் வெளியாகி நேற்று டீசரும் வெளியாகி விட்டது. இதையடுத்து ரிலிஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கில் இந்த படத்தை விநியோகம் செய்ய ஏசியன் பிலிம்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வெளியாக உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்