இன்று வெளியாகிறது விக்ரம் படத்தின் ஓஎஸ்டி! – அனிருத் வெளியிட்ட அப்டேட்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (12:15 IST)
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் அதன் OST ட்ராக்குகள் இன்று வெளியிடப்படுவதாக அனிருத் அறிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபது மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடித்த படம் விக்ரம். பேன் இந்தியா படமாக கடந்த மாதம் 3ம் தேதி வெளியான இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக நல்ல வரவேற்புடன் வசூலை குவித்துள்ளது. இதுவரை இந்த படம் ரூ.500 கோடியை வசூலித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் வெகுவாக பலரால் பாராட்டப்பட்டது.

நாளை இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இன்று மாலை விக்ரம் படத்தின் பின்னணி இசை தொகுப்புகள் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்