விஜய் டிவிக்கு இனி போகவே மாட்டேன்... பிரியங்கா தான் அதற்கு காரணம்?

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (15:06 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா. இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது.
சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார்.
 
ஆனால், சில வருடங்களாக விஜய் டிவியில் இருந்து ஒதுங்கி எந்த ஒரு நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கவில்லை. தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கராக இருக்கிறார். சம்பேத்திய பேட்டி ஒன்றில், "விஜய் டிவிக்கு இனி நான் போகவே மாட்டேன் என கூறி அதிர்ச்சியளித்துள்ளார். காரணம் அதில் காமெடி தான்  முக்கியமாக பார்க்கிறார்கள் என அவ்வளவா Humor sense இல்லை அதனால் விஜய் டிவி ஸ்டைல் எனக்கு செட் ஆகல...! என கூறியுள்ளார். இதையடுத்து பாவனாவை டம்மி செய்தது பிரியங்கா தான் என நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்