விதிகளை மீறிய இந்த விளையாட்டை குறித்து கமல் இன்று பஞ்சாயத்து செய்தார். முதல் ப்ரோமோ வெளியானது. அதில், பாதியில் வந்த அமீர் டிக்கெட் டூ பைனலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் என அறிவித்தார். அதையடுத்து கலகலப்பாக இருந்த இந்த பிக்பாஸ் வீடு கை கலப்பில் முடிந்தது. அந்த சம்பவத்தை குறித்து சம்மந்தப்பட்ட இருவரிடையேயும் விசாரணை நடத்தினார் கமல்.
அதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தாமரை மற்றும் பிரியங்கா இருவரும் காரணத்தை கூறி செய்த தவறை நியாயப்படுத்த முயற்சித்தனர். ஆனால், கமல் அதை ஒப்புக்கொள்ள வைத்தார். 50 லட்சம் பணப்பெட்டியோடு தாமரை வெளியேறிவிடலாம் என ஆடியன்ஸ் கூறி வருகின்றனர்.