தெலுங்கில் சக்கை போடு போடும் விஜய் தேவரகொண்டாவின் தம்பி திரைப்படம் ‘பேபி’

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (09:19 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. அவரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா மிடில் கிளாஸ் மெமரீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து இப்போது பேபி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆனநிலையில் தற்போது வரை 70 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து கலக்கி வருகிறதாம். சமீபத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் வரவேற்பு தொடர்ந்து வருகிறதாம்.

எளிமையான முக்கோணக் காதல் கதையாக உருவாகியுள்ள ‘பேபி’ திரைப்படத்துக்கு அதன் ப்ரமோஷன்களின் போதிருந்தே எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே பிளாக்பஸ்டராகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்