தியேட்டரில் சோபிக்காத ரன் பேபி ரன்… ஆனாலும் செம்ம கல்லா கட்டிய தயாரிப்பு நிறுவனம்!
சனி, 11 பிப்ரவரி 2023 (08:52 IST)
ஆர்ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் என்ற திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், பெரியளவில் வசூல் செய்யவில்லை.
ஆனால் படத்தின் திரையரங்கு உரிமை தவிர்த்து தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளில் நல்ல தொகைக்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக இந்த படம் நல்ல லாபத்தைப் பார்த்துள்ளதாக சொலல்ப்படுகிறது.
தொடர்ந்து ஆர் ஜே பாலாஜியின் படங்கள் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.