நடிகர் அமிதாப் பச்சனுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பாக எப்போதும் இரண்டு காவலர்கள் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அப்படி அமிதாப்புக்கு 2015 ஆம் ஆண்டு பாதுகாவலராக இருப்பவர்தான் ஜிதேந்திரா ஷிண்டே. ஒருவர் பிரபலம் ஒருவருக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள்தான் தொடர்ந்து பாதுகாவலராக இருக்க முடியும். ஆனால் ஷிண்டே 6 ஆண்டுகள் பணியில் உள்ளார். மேலும் அவர் ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாக செய்திகள் வெளியாகவே அவர் மீதான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு பற்றி ஷிண்டே தானும் மனைவியும் இணைந்து தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதன் மூலமாக அந்த வருவாயை ஈட்டியதாகவும் கூறியுள்ளார்.