15 ஆண்டுகளை நிறைவு செய்த வேட்டையாடு விளையாடு! நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ரசிகர்கள்!

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (15:45 IST)
கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றிப் படங்களில் வேட்டையாடு விளையாடு திரைப்படமும் ஒன்று.

கமல் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் கமலுடன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளதை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்