ரஜினிக்கு வில்லன் ஆகிறாரா அமிதாப் பச்சன்?... ஞானவேல் எடுத்த முயற்சிக்கு கிரீன் சிக்னல்!

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (09:07 IST)
ரஜினிகாந்த் இப்போது தான் நடிக்கும் ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களை முடித்து விட்டு த செ ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் விக்ரம்மை படக்குழு அனுகியது. விக்ரம்முக்கு இதுவரை வாங்காத சம்பளமாக 50 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தும் அவர் நடிக்க முடியாது என மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த வாய்ப்பு அர்ஜுனுக்கு சென்றதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது திடீரென்று அந்த வேடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக மும்பை சென்று இயக்குனர் ஞானவேல் கதையை அமிதாப்புக்கு சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்