“விஜய்க்கு அரபிக் குத்து.. ரஜினிக்கு…” -ஜெயிலர் படத்தில் பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்?

வியாழன், 8 ஜூன் 2023 (13:13 IST)
ரஜினிகாந்த் அடுத்தடுத்து தோல்வி படங்களுக்குப் பிறகு இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்திலும், ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தில் ரஜினிகாந்துடன் சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா,  யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

விரைவில் படத்தின் பாடல் வெளியீடு நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை நெல்சன் இயக்கிய அனைத்து படங்களிலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்