கமலின் விக்ரம் படத்தில் ஒரு செம்ம கெஸ்ட் ரோல்…. நடிக்கப்போவது யார் தெரியுமா?

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (12:30 IST)
கமலின் விக்ரம் படத்தில் ஒரு முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

கமல்ஹாசன் அரசியலில் பிஸி ஆனதில் இருந்து சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கமலின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் முழுவதுமாக படப்பிடிப்பை இன்னும் முடிக்கவில்லை. சில முக்கியக் காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஒரு முன்னணி ஸ்டார் நடிகர் கௌரவ வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என லோகேஷ் நினைக்க, கமல் இப்போது இந்த வேடத்துக்காக அமிதாப் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்