நடிகர் சங்க பொறுப்பில் மீண்டும் கமல்ஹாசன்… பாண்டவர் அணி அறிவிப்பு!

வியாழன், 24 மார்ச் 2022 (11:11 IST)
வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் உலக நாயகன் கமல்ஹாசனை மீண்டும் நிர்வாக அறங்காவலராக நியமிக்க தீர்மானம் செய்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் சில தினங்களுக்கு முன்னர் எண்ணப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மீண்டும் நடிகர் சங்கத்தை கைப்பற்றியுள்ளது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் .

மேலும் துணை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் சங்கத்தை முழுமையாக பாண்டவர் அணி மீண்டும் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் இன்று தலைமை செயலகத்துக்கு சென்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

இதையடுத்து நேற்று பதவியேற்பு விழா மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் நடிகர் சங்கத்தின் நிர்வாக அறங்காவலராக கமல்ஹாசனை மீண்டும் நியமிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கமல்ஹாசன் கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாண்டவர் அணியை ஆதரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்