மீண்டும் ஒரு மருத்துவமனைக்கு உதவி செய்த அமிதாப் பச்சன்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (12:44 IST)
நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா உபகரணங்களை வழங்கி உதவி செய்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக டெல்லியின் ஸ்ரீ குரு தேஜ்பகதூர் கோவிட் சிகிச்சை மையத்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 2 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.  அமிதாப் கடந்த ஆண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது அதே போல மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு 1.75 லட்சம் மதிப்புள்ள வெண்ட்டிலேட்டர் மற்றும் கொரோனா உபகரணங்களை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்