பொன்னியின் செல்வனில் இருந்து விலகினாரா அமிதாப் பச்சன்?

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (15:58 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து அமிதாப் பச்சன் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில் இப்போது அனைத்து நடிகர்களையும் வைத்து மிகப் பிரம்மாண்டமாக பாடல் ஒன்றை எடுத்து வருகிறாராம். ஆனால் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக சொல்லப்பட்ட அமிதாப் பச்சன் இதுவரை இந்த படத்தில் நடிக்கவே இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியமானக் காரணம் அவர் கொடுத்த தேதிகளை பலமுறை பயன்படுத்த முடியாமல் போனதே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த காரணத்தால் இப்போது படத்தில் இருந்து அமிதாப் பச்சன் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்