இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் வாடிவாசல்!

புதன், 17 பிப்ரவரி 2021 (10:06 IST)
சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

அதே போல வெற்றிமாறனும் இப்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் முடிந்த பின்னரே வாடிவாசல் ஆரம்பிக்கும் என சொல்லப்பட்ட நிலையில்  இந்த ஆண்டு இறுதியில் வாடிவாசல் படம் தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது. சூர்யா மே மாதத்துக்குள் பாண்டிராஜ் படத்தை முடிக்க உள்ளாராம். அது போல வெற்றிமாறன் சூரி திரைப்படமும் பாதி முடிந்துவிட்டதாம். இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு இந்த ஆண்டின் பின் பகுதியில் வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்த உள்ளனராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்