இந்தியாவிற்குள் நுழைந்த மேலும் இரு உருமாற்ற கொரோனா! – ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!

புதன், 17 பிப்ரவரி 2021 (10:41 IST)
லண்டனிலிருந்து உருமாற்ற கொரோனா இந்தியாவில் பரவிய நிலையில் மேலும் இரு உருமாற்ற கொரோனாவும் இந்தியாவில் பரவியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லண்டனில் கண்டறியப்பட்ட வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் லண்டனின் வீரியமிக்க கொரோனா வைரஸ் போலவே பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இரு வேறு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது இந்த வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த புதிய வைரஸால் குறைந்தது 5 பேராவது பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்