ஜெயிலுக்கும் போனாதான் அரசியல் வாழ்க்கை முழுமையடையும்… அமீர் நடிக்கும் உயிர் தமிழுக்கு புதிய டீசர்!

vinoth
சனி, 30 மார்ச் 2024 (07:32 IST)
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அரசியல் கதைக்களம் கொண்ட படமாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஆதம் பாவா இயக்கி தயாரித்துள்ளார்.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் புதிய டீசர் ஒன்று ரிலீஸாகியுள்ளது. மேலும் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்