அமீர், சசிகுமார் & வெற்றிமாறன் இணையும் நிலம் எல்லாம் ரத்தம் வெப் தொடர்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:03 IST)
இயக்குனர் வெற்றிமாறன் இப்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் படங்களை இயக்குவதோடு, ஓடிடி தளங்களுக்காக சில ஓடிடி தொடர்களையும் தயாரித்து வழங்கி வருகிறார். அந்த வகையில் அடுத்து அமீர் மற்றும் சசிகுமார் நடிப்பில் ரமேஷ் கண்ணன் இயக்கும் நிலம் எல்லாம் ரத்தம் எனும் வெப் தொடரையும் வழங்க உள்ளார்.

இந்த வெப் தொடரில் அவர் இரண்டு எபிசோட்களையும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வெற்றிமாறன் பேட்டைகாளி மற்றும் ராஜன் வகையறா ஆகிய வெப் தொடர்களிலும் பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்