வாடிவாசல் படத்தில் நடிக்கிறாரா மோகன் லால்… வெற்றிமாறன் திட்டம் என்ன?

செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:48 IST)
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும்  வாடிவாசல் திரைப்படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரை நடிக்கவைக்க வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் மோகன் லாலை நடிக்க வைக்கலாம் என தயாரிப்பாளர் தாணு பரிந்துரை செய்தாராம். ஆனால் வெற்றிமாறன் அமீர்தான் அந்த கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பார் என்று உறுதியாக பேசி தாணுவிடம் சம்மதம் வாங்கிவிட்டாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்