எனக்கு இயக்குனர்களோடு அது ரொம்ப முக்கியம்… அஜித் சொன்ன ரகசியம்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (09:51 IST)
அஜித் தான் பணிபுரியும் இயக்குனர்களோடு இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதில் மெனக்கெடுகிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கோ அதற்கு முன்போ இந்த படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ஹெச் வினோத் அஜித்திடம் பேசிய சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் ‘நான் அஜித்திடம் ‘சார் நீங்கள் எனக்கு வாய்ப்புக் கொடுத்ததால் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதைப்போல நீங்கள் நிறைய இயக்குனர்களுடன் படம் பண்ணவேண்டும்’ எனக் கூறினேன். அதற்கு அஜித் ‘நான் கம்பர்ட்டபளாக இருக்கும் இயக்குனர்களோடு மட்டுமே பணிபுரிகிறேன். அது எனக்கு மிகவும் முக்கியம்’ எனக் கூறினாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்