மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் ரம்ஜானை முன்னிட்டு வெளியாகி எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள மாநில பாஜக நிர்வாகி விஜேஷ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கேரள உயர்நீதிமன்றம் விடுமுறையில் இருந்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த படத்தால் ஏற்பட்ட வன்முறை, காவல்துறையின் எஃப் ஐ ஆர் எதுவும் இருக்கிறதா? இது தணிக்கையால் சான்றளிக்கப்பட்ட படம்தானே?” எனப் பலக் கேள்விகளை அவரை நோக்கி எழுப்பி இது சம்மந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறியது.