சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

vinoth

புதன், 2 ஏப்ரல் 2025 (09:06 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டு அதில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் எஸ் ஜே சூர்யா பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ ஒன்று வெளியானது. அதில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி “முதல் பாகத்துக்கு இயக்குனர் சர்தார் என்று பெயர் வைத்ததில் இருந்தே எனக்கு இந்த கதை மேல் ஆர்வம் வந்துவிட்டது. அந்த சர்தார் திரும்ப வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தோம். தற்போது அது நிறைவேறி உள்ளது. ஒரு படத்தில் ஹீரோவும் வில்லனும் சம பலத்துடன் இருந்தால்தான் போர் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த படம் மிகப்பெரிய போரைப் பற்றிப் பேசப் போகிறது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்