துணிவு இன்னும் ஸ்பெஷலான படம்… ஜிப்ரான் போட்ட மகிழ்ச்சி ட்வீட்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:30 IST)
இசையமைப்பாளர் ஜிப்ரான் துணிவு படத்துக்கு இசையமைத்துள்ளார். இது அவரின் 50 ஆவது படமாக அமைந்துள்ளது.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகளான டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவை தொடங்கியுள்ளன. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு ப்ரோமோ பாடலை தற்போது சென்னையில் படமாக்கி வருகின்றனர். நடன இயக்குனர் கல்யாண், இந்த பாடலுக்கு நடனம் அமைக்கிறார். சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த பாடலை படமாக்கி வருகின்றனர்.

வலிமை படத்துக்கு பின்னணி இசையமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “என்னுடைய நாளை சிறப்பாக்கியதற்கு  போனி கபூர், ஜி நிறுவனங்களுக்கு நன்றிகள் ’துணிவு' என்னுடைய கூடுதல் சிறப்பு வாய்ந்த திரைப்படம். இது என்னுடைய 50வது படம் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன், இதில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றிகள், அஜித் சார் & H. வினோத்" எனக் கூறியுள்ளார். ஜிப்ரான் வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்