நாளை ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா ‘வலிமை?

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:57 IST)
அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான நிலையில் நாளை இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அஜித் நடித்த வலிமை  திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் நாளை ஜீதமிழ் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது இதனால் அஜீத் ரசிகர்கள் குஷியாக இருந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது
 
ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்தே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இருபத்தி நான்கு நாட்களிலேயே ஓடிடியில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்