அஜித் 61 படத்தின் தலைப்பு இதுதானா? இணையத்தில் பரவும் தகவல்!

வெள்ளி, 18 மார்ச் 2022 (15:37 IST)
அஜித் 61 படத்தின் வேலைகளில் இப்போது ஹெச் வினோத் மும்முரமாக இருந்து வருகிறார்.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இம்மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மிகப்பெரிய கொள்ளை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி இந்த கதைக்களத்தை ஹெச் வினோத் உருவாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்துக்கு வல்லமை என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை படக்குழு எந்த் தகவலையும் வெளியிடவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்