’வலிமை’ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (16:43 IST)
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன
 
’வலிமை’ படத்தின் ரன்னிங் டைம் 178 நிமிடங்கள் என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்து உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த படத்தின் கிட்டத்தட்ட மூன்று மணி நேர ரன்னிங் டைமில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்டண்ட் மற்றும் சேசிங் காட்சிகள் தான் இருக்கும் என்றும் படக்குழுவினர்களிடம் தகவல் வெளியாகியுள்ளன 
 
’வலிமை’ படம் மூன்று மணி நேரம் ரன்னிங் டைமாக இருந்தாலும் படம் விறுவிறுப்பாக இருந்தால் நீளமான ரன்னிங் டைம் என்பது பெரிய விஷயமாக இருக்காது என்று அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்