அட்டகாசமான நியூலுக்கில் அஜித்! வைரலாகும் புகைப்படங்கள்

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (21:35 IST)
அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆகிய நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வினோத் மீண்டும் அஜித் படத்தை இயக்க உள்ளார். ’தல 60’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் அஜித்தின் நியூலுக் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

‘தல 60’ படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில் ’தல 60’ படப்பிடிப்பற்காக விமான நிலையம் வந்த அஜித், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் இல்லாமல் இளமை தோற்றத்துடன் காணப்பட்டார். அஜித்தின் தோற்றத்தை பார்த்து அசந்துபோன அவருடைய ரசிகர்கள் பலர் விமான நிலையத்தில் அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகியுள்ளது.

இந்த புதியலுக்கில் தல அஜித் மாஸாக இருப்பதாகவும், ‘தல 60’ திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அஜித் தற்போது நடிக்கும் 60வது படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான கதையை இயக்குனர்களிடம் தற்போதே கேட்டு வருவதாகவும், அடுத்த படத்திலும் அஜித் இளமை லுக்கில்தான் இருப்பதாகவும் கூறப்படுவதால் அஜித் ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக இனி விருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்