நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

Siva

புதன், 30 ஜூலை 2025 (17:13 IST)
மாதாம்பட்டி ரங்கராஜன் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும், ஜாய் தற்போது ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நானும் ரங்கராஜ் அவர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம். கண்ணியத்துடனும் மிகுந்த அன்புடனும் நானும் அவரும் புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டோம். எங்கள் அன்பின் அடையாளமாக ஒரு குழந்தை எங்களுக்கு பிறக்கப்போகிறது," என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
ரங்கராஜனுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற் ஒரு மனைவி இருக்கும் நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த குழப்பமான சூழலில்தான் ஜாயின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்