’வாரிசு’ மற்றும் ‘ஏகே 61’ ஒரே நாளில் ரிலீஸா?

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (17:59 IST)
தளபதி விஜய் நடித்த வாரிசு மற்றும் தல அஜித் நடித்த ஏகே 61 ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
விஜய் மற்றும் அஜீத் படங்கள் கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு மோதியது என்பதும் ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் இரண்டு படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் பொங்கல் திருநாளில் வாரிசு திரைப்படம் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த ‘ஏகே 61 திரைப்படமும் பொங்கல் திருநாளில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் விஜய் படங்கள் மோத இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்