இந்த நிலையில், பூரி ஜெகந் நாத் இயக்கத்தில், விஜய்தேவரகொண்டா நடிப்பில், சுமார் 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் லைகர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் சமீபத்தில் வெளியானது.
மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.சினிமா விமர்சகர்களும் இப்படடத்திற்கு இதையே கூறி வருகின்றனர். ஆனால், விஜய்தேவரகொண்டா கடுமையாக உழைத்துப் படத்தில் நடித்திருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.
அதன்பின், இப்படம் ரிலீஸான நிலையில் கர்நாடகாவில் இப்படத்தைப் பார்க்க தியேட்டர்களில் 17% பார்வையாளர்கள்தான் வந்துள்ளதாகவும் படிப்படியாக தமிழகத்திலும் இப்படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், லைகர் இந்தி கலெக்சன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளன்று ரூ.5.71 (1.75 preview) கோடியும், இரண்டாம் நாளன்று ரூ.4.25 கோடியும், மூன்றாம் நாளன்று ரூ.3.75 கோடியும் வசூலீட்டியுள்ளதாகவும், மொத்தம் இப்படம் இதுவரை 13.75 கோடி( சேர் 6.25) ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 10 கோடி ரூபாய் பிஸினஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் முதல் 3 நாட்களில் 13 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.