விஜய் சேதுபதியின் 50 ஆவது படம்… இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விவரம்!

திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (15:23 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தை அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிதான் இயக்க வேண்டும் என அவர் உறுதியாக இருக்கிறாராம்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லன், சிறப்புத்தோற்றம் ஆகிய வேடங்களிலும் நடித்துக் கலக்கி வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் 50 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் வேல்ஸ் இண்டர்னேஷனல் பிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களோடு இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. சீனு ராமசாமி தற்போது ஜி வி பிரகாஷை வைத்து இடிமுழக்கம் படத்தை இயக்கியுள்ளார். இந்த பட ரிலீஸுக்கு பிறகு விஜய் சேதுபதி 50 படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்