நயன்தாரா இல்லன்னா திரிஷா… அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யில் ஹீரோயின் யார்?

vinoth
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (09:13 IST)
அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே மெ மாதம் தொடங்கி ஐதராபாத்தில் சில நாட்கள் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியானது. இதுவரை இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் நயன்தாராதான் கதாநாயகி என்று சில தகவல்கள் பரவின. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் த்ரிஷா நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் தற்போது அஜித்தோடு விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்