அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் இப்போது விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கும், குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கும் ஐதராபாத்தில் அருகருகே நடக்கிறது. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் வெளியிட்டுள்ள தகவலின் படி அஜித், இரண்டு படங்களின் ஷூட்டிங்கிலும் மாறி மாறி நடித்து கொண்டிருக்கிறாராம். பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித், ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.