அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவரும் சுனிலும் நடிக்கும் முக்கியக் காட்சிகளை தற்போது இயக்குனர் ஆதிக் படமாக்கி வருகிறாராம். விரைவில் அஜித் இந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.