ஐதராபாத்தில் நடந்த முதல் கட்ட ஷூட் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங்குக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ளது” எனக் கூறியுள்ளார். இப்போது அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஸர்பைஜானில் இருக்கும் நிலையில் அதை முடித்ததும் தென்னாப்பிரிக்கா கிளம்புவார் என சொல்லப்படுகிறது.