காத்திருக்கிறோம் தல.... இப்போவாச்சு அப்டேட் கொடுப்பாரா போனி??

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (08:03 IST)
சமூக வலைத்தளங்களில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். 

 
நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இதுவரை டைட்டில் போஸ்டரோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ வெளியாகாமல் எந்த வித அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது.
 
ஒவ்வொரு நல்ல நாளிலும் இன்று வலிமை அப்டேட் வரதா என எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்த அஜித் ரசிகர்கள் அப்டேட் வெளியிட சொல்லி பேனர் வைக்கு லெவலிலும் இறங்கினார்கள். இவ்வளவு செய்தும் வலிமை படக்குழுவிடமிருந்து ‘அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள்’ என்ற அப்டேட் மட்டுமே வந்தது.
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அப்டேட் கேட்டு ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கும் அஜித் ரசிகர்கள் தற்போது #காத்திருக்கிறோம்தல என்ற ஹேஷ்கேட்டை டிரெண்டாக்கி வருகின்றனர். புத்தாண்டிற்காவது ஏதேனும் அப்டேட் வருமா அல்லது அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டே தான் இருக்க வேண்டுமா என பொருத்திருந்து பார்ப்போம்... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்