அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (18:20 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது, ஹெச். வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில், துணிவு என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்திற்கு  எந்தவித  முன்னறிவிப்பு இன்றி, அஜித்61 பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் துணிவு என்ற தலைப்பில்  ரிலீசாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அஜித்தின் துணிவு பட ஃபர்ஸ்ட்லுக்  போஸ்டருக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ALSO READ: சென்னை ஏர்போர்ட்டில் அஜித் -மஞ்சு வாரியார் !வைரல் வீடியோ

இந்த நிலையில்,  துணிவு பட போஸ்டரை மதுரையில் ஒட்டிய அஜித் ரசிகர்கள், அதில், வாரிசா வந்து ஜெயிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்ல. தனியா துணிவா வந்து ஜெயிக்கிறதுதான் பெரிய விஷயம் என்றும் வரும் 2023 ஆம் வருடம் படம் ரிலிஸாகும் என்றும் பதிவிட்டு, அதற்கு கீழ், ஆசை நாயகன் அஜித் நற்பணி இயக்கம் திருப்பரங்குன்றம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்