சமீபத்தில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன. இதெல்லாவற்றுக்கும் உச்சமாக விஜய்யின் கில்லி ரி ரிலீஸிலேயே 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது.