கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் அவர் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, விசாரணைக்கு தேவைபடும் போது நேரில் ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணைத் தொகை உத்தரவாதத்தை செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டு வரி, மின்சார கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடத்திய போது, சட்டவிரோதமாக கூட்டம் கூட்டியதாகவும், பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.