அப்டேட்டுக்காக அலைஞ்சீங்களே.. இது போதுமா? – வைரலாகும் அஜித் ஸ்டண்ட் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (12:15 IST)
அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்து ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த அப்டேட்டும் இல்லாததால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களின் கவலையை போக்கும் வகையில் அஜித் ஸ்டண்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜடம் த் நடித்து வரும் ”வலிமை”. முன்னதாக அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிக்கபூர் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் படம் குறித்த போஸ்டரோ எந்த விதமான அப்டேட்டுமோ வெளியாகததால் அஜித் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் பிரபலமான ரேஸ் பைக்கின் முன் சக்கரத்தை தூக்கியபடி ஸ்டண்ட் செய்யும் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வரும் அஜித் ரசிகர்கள் விரைவில் வலிமை குறித்த வலிமையான அப்டேட் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்