ரூ.600 கோடி முதலீடு செய்யும் சன் நெட்வொர்க்: எதில் தெரியுமா?

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (19:45 IST)
ரூ.600 கோடி முதலீடு செய்யும் சன் நெட்வொர்க்: எதில் தெரியுமா?
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சன் நெட்வொர்க் ரூபாய் 600 கோடி புதிதாக முதலீடு செய்ய உள்ளது. இதில் 300 முதல் 400 கோடியை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் அதன் மூலம் ஒரே நேரத்தில் 5 முதல் 8 படங்கள் வரை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் 200 கோடியை நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்காக திரைப்படங்கள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
டிஜிட்டல் உலகின் முன்னணி இடத்தில் இருக்கும் சன் நெக்ஸ்ட் நிறுவனம் 600 கோடியை முதலீடு செய்ய இருப்பதால் இனி தரமான அதிரடியான திரைப்படங்கள் சன் பிக்சர்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்