இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னை அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதி மக்களை தனது பவுண்டேஷன் மூலம் தங்க வைத்து உணவு அளித்து உதவியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இப்போதான் நிம்மதியா தூங்க போறேன். குறைந்த பட்சம் என்னை சுற்றியுள்ள ஒரு சிலருக்காவது என்னால் இயன்றதை செய்துள்ளேன். நீங்கள் மக்களுக்கு செய்த உதவியை பகிர்ந்து கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.