அஜித்தின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

vinoth

வியாழன், 11 செப்டம்பர் 2025 (11:55 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். தன்னுடைய பட சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அவரது படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங்கும் வசூலும் கிடைக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் – ஆதிக் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக அமைந்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார் என்றும் அதை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த படத்துக்கான வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றது. அஜித் தனது ரேஸ் செஷனை அக்டோபர் மாதத்தில் முடிக்க உள்ள நிலையில் அம்மாத இறுதியில் ஷூட்டிங்கை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமான செட் ஒன்றைப் படக்குழு அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்