சீரியலுக்காக அஜித் படத்தையே வேண்டாம் என்று சொன்ன தேவயானி… இயக்குனர் திருச்செல்வம் பகிர்ந்த தகவல்!

vinoth

புதன், 10 செப்டம்பர் 2025 (11:53 IST)
தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. ரஜினி, கமலை தவிர மற்ற எல்லா நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர். அப்போது அவரை வைத்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரனை பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். அதனால் பல ஆண்டுகள் அவர்கள் பெற்றோருடன் பேசாமல் வாழ்ந்து வந்தார்.

அதன் பிறகு சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்த நிலையில் சீரியலில் கவனம் செலுத்தினார். அவர் நடித்த கோலங்கள் சீரியல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவானார். அவர் நடித்தக் கோலங்கள் பம்பர் ஹிட்டடித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பானது.

இந்த தொடரின் இயக்குனர் திருச்செல்வம் தற்போது தேவயானி பற்றி சீக்ரெட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் “கோலங்கள் சீரியல் தமிழகமெங்கும் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. அப்போது வந்த பல சினிமா வாய்ப்புகளை தேவயானி மறுத்துவிட்டார். வரலாறு படத்தில் கூட அஜித்துக்கு (தந்தை கதாபாத்திரத்துக்கு) நடிக்க கே எஸ் ரவிக்குமார் அழைத்தார். ஆனால் தேவயானி அந்த வாய்ப்பையும் நிராகரித்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்