அஜித்- ஆதி திடீர் சந்திப்பு… பின்னணி என்ன?

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (13:38 IST)
நடிகர் அஜித்தை ஆதி சந்தித்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் நடித்துவரும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே மஞ்சு வாரியர் ஜான் கொகைன் உள்பட ஒருசில நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஆதி, அஜித்தைப் படப்பிடிப்பு தளத்துக்கே சென்று சந்தித்துள்ளார்.

இதனால் அவரும் அஜித் படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் விரைவில் தனக்கும் நிக்கி கல்ராணிக்கும் இடையே நடக்க உள்ள திருமணத்துக்கு அழைப்பதற்காகதான் சென்றதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்