அர்ஜுன் & ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (17:18 IST)
ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே . இந்த நிலையில் அர்ஜுன் நடிகை இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இயக்குனர் தினேஷ் லட்சுமணன் என்பவர் இயக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அர்ஜூன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார். அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதால் அவர் பின்னர் படக்குழுவுடன் இணைய உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்